சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாயி தர்ணா; அதிகாரி சமரசம்

Added : செப் 15, 2020
Share
Advertisement
 விவசாயி தர்ணா; அதிகாரி சமரசம்

திருப்பூர்:சமரச பேச்சு நடத்த, விவசாயிகளை அனுமதிக்காததால், ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில், தர்ணாவில் ஈடுபட்டனர்.கோவையில் இருந்து, பல்வேறு மாவட்டம் வழியாக கர்நாடக எல்லை வரை, விளைநிலம் வழியாக, பெட்ரோலிய குழாய் பதிக்கும் திட்டப்பணி நடந்து வருகிறது.விளைநிலம் வழியாக, குழாய் பதிக்காமல், நெடுஞ்சாலை வழியாக, குழாய் பதிக்க வேண்டுமென, விவசாயிகள், தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.பல்லடம், காங்கயம் தாலுகா பகுதிகளில், அடிக்கடி இப்பிரச்னை ஏற்படுகிறது. இதுதொடர்பாக, திருப்பூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் முறையிட, நேற்று விவசாயிகள் வந்திருந்தனர். ஐந்து பேர் மட்டும் அலுவலகம் வருமாறு, ஆர்.டி.ஓ., கவிதா தெரிவித்தார். அதிருப்தியடைந்த விவசாயிகள், அலுவலக வளாகத்தில், அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.அதிகாரி சமரசம் செய்தததையடுத்து, கோரிக்கையை, ஆர்.டி.ஓ.,விடம் மனுவாக வழங்கி, கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X