பார்லிமென்ட் செய்திகள்

Added : செப் 15, 2020
Share
Advertisement

ராணுவ வீரர்களுக்கு ஆதரவாகநாடே அணி திரண்டுள்ளதுபார்லிமென்ட் வளாகத்தில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று அளித்த பேட்டி:இந்திய - சீன எல்லையில் காவல் காக்கும் நம் வீரர்கள், கடினமான சூழலில் பணி புரிகின்றனர்.இதுபோன்ற நேரத்தில், இந்திய வீரர்களுக்கு ஆதரவாக ஒட்டு மொத்த நாடும் அணி திரண்டு நிற்கிறது என்ற நல்ல செய்தியை, பார்லிமென்ட் வாயிலாக, நம் வீரர்களுக்கு அனுப்ப வேண்டும். இதற்கான கடமையும், பொறுப்பும் எம்.பி.,க்களுக்கு உள்ளது.அனைத்து எம்.பி.,க் களும் ஒரே குரலில் தங்கள் ஆதரவை, இந்திய வீரர்களுக்கு தெரிவிப்பர் என்ற நம்பிக்கை உள்ளது.

பார்லிமென்டில் இந்த முறை முக்கியமான முடிவுகளும், விவாதங்களும் நடக்கும். எம்.பி.,க்கள், தங்கள் செயல்பாடுகள் வாயிலாக, பார்லிமென்டின் மதிப்பை கூட்ட வேண்டும். கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், எம்.பி.,க்கள், தங்கள் கடமையை ஆற்றுவதற்காக பார்லிமென்டிற்கு வந்துஉள்ளது, பாராட்டத்தக்கது. வைரஸ் பிரச்னையை கருத்தில் வைத்து, இந்த கூட்டத் தொடரில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.அனைத்து, எம்.பி.,க்களும், கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை, நாம் அலட்சியமாக இருக்கக் கூடாது. தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. எங்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும், அது, நம் நாட்டு மக்களுக்கு விரைவில் கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். இவ்வாறு, பிரதமர் கூறினார். சமூக விலகலை பின்பற்றசபாநாயகர் வலியுறுத்தல்லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று பேசியதாவது:கொரோனா வைரஸ் பரவி வரும், ஒரு இக்கட்டான சூழலில் இந்த பார்லிமென்ட் கூட்டத் தொடர் நடக்கிறது.

உறுப்பினர்கள் அலட்சியம் காட்டக் கூடாது. முக கவசம் அணிவது, சமூக விலகலை பின்பற்றுவது உள்ளிட்ட விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.சிலருக்கு, பார்வையாளர் மாடத்தில் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், உங்களுக்கு சில பிரச்னைகள் இருக்கலாம். ஆனால், வேறு வழியில்லை. உறுப்பினர்கள் பேசும்போது, இருக்கையிலேயே இருக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.கேள்வி நேரம் இல்லைதீர்மானம் நிறைவேற்றம்பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரில் கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்நிலையில், பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, கேள்வி நேரம் ரத்து மற்றும் தனி நபர் மசோதா தாக்கல் ரத்து செய்வதற்கான தீர்மானத்தை லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் லோக்சபா தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி பேசியதாவது:கேள்வி நேரம் என்பது, இந்த சபையின் பொன்னான நேரம். பார்லிமென்ட் ஜனநாயகத்தில், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது; அவசியமானது.

கேள்வி நேரத்தை ரத்து செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது... சாதாரண மக்களின் கேள்விகளை இந்த சபையில் எழுப்ப நினைக்கிறோம். அதற்கு ஏன் தடை போடப்படுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளால், பார்லிமென்ட் ஜனநாயகத்தை மத்திய அரசு சீர்குலைக்க நினைக்கிறது.இவ்வாறு, அவர் பேசினார்.ஆனாலும், எதிர்க்கட்சியினரின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையில், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. லோக்சபா ஒத்திவைப்புலோக்சபா நேற்று கூடியதும், 20 நிமிடங்களுக்குப் பின், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி., வசந்த குமார் மற்றும் முன்னாள் எம்.பி.,க்கள், 14 பேர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், ஒரு மணி நேரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதன்பின் மீண்டும் சபை அலுவல்கள் துவங்கி, பகல், 3:00 மணி வரை நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X