சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நகராட்சி வாகனம் சிறைபிடிப்பு

Added : செப் 15, 2020
Share
Advertisement
 நகராட்சி வாகனம் சிறைபிடிப்பு

பல்லடம்:பல்லடம் அருகே, குப்பை கொட்ட வந்த நகராட்சி வாகனம், சிறை பிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பல்லடம் - உடுமலை ரோடு, வடுகபாளையம்புதுார் ஊராட்சிக்குட்பட்ட பாலாஜிநகர் பகுதியில், நீர் ஆதார கிணறு உள்ளது. அதில், குப்பை கொட்டிய நகராட்சி வாகனத்தை, அப்பகுதியினர் சிறைபிடித்தனர்.குடியிருப்புவாசிகள் கூறுகையில், 'இப்பகுதியில், குடியிருப்பு மற்றும் மின்வாரிய அலுவலகம் செயல்படுகிறது.
இங்குள்ள கிணற்றின் மூலம், தண்ணீர் தேவை பூர்த்தியாகிறது. கிணற்றில், நகராட்சி நிர்வாகத்தினர் விதிமீறி, குப்பை மற்றும் கழிவு கொட்டுகின்றனர்.இதனால், கிணற்றுநீர் மாசடைகிறது. சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகமும் கண்டுகொள்வதில்லை. குப்பைக்கொட்ட, அவற்றை பிரித்து உரமாக்க, நகராட்சிக்கு சொந்தமான கிடங்கு உள்ளது,'' என்றனர்.'வரும் நாட்களில், குப்பைக்கொட்ட மாட்டோம்' என, நகராட்சி ஊழியர்கள் உறுதியளித்த நிலையில், வாகனம் விடுவிக்கப்பட்டது. இதனால், சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X