சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுவில் விஷம் கலந்து கணவர் கொலை மனைவி, கள்ளக்காதலனிடம் விசாரணை

Added : செப் 15, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 மதுவில் விஷம் கலந்து கணவர் கொலை மனைவி, கள்ளக்காதலனிடம் விசாரணை

உளுந்துார்பேட்டை : கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவருக்கு, மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தது குறித்து, மனைவி, கள்ளக்காதலனிடம், போலீசார் விசாரிக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலுார் அடுத்த செஞ்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன், 40; லாரி டிரைவர். இவரது மனைவி சத்யா, 35; இவர்களுக்கு, 11 வயதில் மகள், 7 வயதில் மகன் உள்ளனர்.கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த விசூர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர், சத்யாவுக்கு தாய்மாமன் முறை. சத்யா, சீனுவாசன் இடையே கள்ளத் தொடர்பு இருந்துள்ளது.கண்டிப்புஇதையறிந்த ஆனந்தன், இருவரையும் கண்டித்து உள்ளார். நேற்று முன்தினம் இரவு, 9:00 மணியளவில், கெடிலம் அருகே, சீனிவாசனை போய் பார்க்கும்படி, ஆனந்தனிடம் சத்யா கூறிஉள்ளார்.அங்கு, இருவரும் மது குடித்தனர். இரவு, 11:00 மணியளவில் ஆனந்தனை வீட்டின் அருகே, சீனுவாசன் விட்டு சென்று உள்ளார்.

மயக்க நிலையில் இருந்த ஆனந்தனை, அங்கிருந்தவர்கள் அவரது வீட்டில் சேர்த்தனர்.சிறிது நேரத்தில், வாயில் நுரை தள்ளிய நிலையில், ஆனந்தன் இறந்தார். திருநாவலுார் போலீசார், சத்யா மற்றும் சீனிவாசனிடம் விசாரணை நடத்தினர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், மதுவில் விஷம் கலந்து கொலை செய்திருப்பது தெரிந்தது. இருவரிடமும், தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.குழந்தை கொலைதிருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ், 30. நெல் கதிர் அறுக்கும் இயந்திர டிரைவர். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, கிளியூரைச் சேர்ந்தவர் மகேந்திரன் மனைவி எழிலரசி, 28.மகேந்திரன், உடல் நலக் குறைவால் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துள்ளார்.

திருமணமான ராமதாசுக்கும், எழிலரசிக்கும், 'ஹலோ ஆப்' மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும், அடிக்கடி வேளாங்கண்ணியில் தனிமையில் சந்தித்து, உல்லாசமாக இருந்துள்ளனர். கடந்த, 10ம் தேதி, வேளாங்கண்ணி தனியார் விடுதியில், ராமதாஸ் அறை எடுத்து தங்கியிருக்க, எழிலரசி, தன் 3 வயது பெண் குழந்தையுடன் தாமதமாக வந்துள்ளார். இதில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. மறுநாள் இருவரும், உல்லாசமாக இருந்தபோது, குழந்தை இடையூறாக இருந்துள்ளது. ஆத்திரமடைந்த ராமதாஸ், குழந்தையை தாக்கி, எட்டி உதைத்துள்ளார். இதில் குழந்தை, மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளது.

படுகாயமடைந்த குழந்தையை, இருவரும் நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்ததை அடுத்து, குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு, இருவரும் மாயமாகி விட்டனர்.வேளாங்கண்ணி வி.ஏ.ஓ., புகாரின்படி, வழக்கு பதிந்த போலீசார், நேற்று முன்தினம் இரவு, இருவரையும் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
srinivasan - stockholm,சுவீடன்
17-செப்-202018:04:37 IST Report Abuse
srinivasan ஆண்கள் சமையல் செய்து சாப்பிட வேண்டும். அல்லது, மெஸ்ஸில் சாப்பிட வேண்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X