கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தனியார் பஸ் ஊழியர்கள் நிவாரணம் கோரி வழக்கு

Added : செப் 15, 2020
Share
Advertisement

மதுரை : நிவாரணம் வழங்க கோரி, தனியார் பஸ் ஊழியர்கள், உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

திருச்சி தனியார் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் போக்குவரத்து தொழிலாளர் சங்க தலைவர் செல்வம் தாக்கல் செய்த மனு: திருச்சி மாவட்டத்தில், 200 தனியார் பஸ்கள் உள்ளன. கொரோனா ஊரடங்கில், பஸ்கள் இயக்கப்படாததால், இவற்றில் பணிபுரியும் டிரைவர், கண்டக்டர்கள் வருவாயின்றி சிரமப்படுகின்றனர்.ஜூலை, 10ல் அரசு, பஸ் உரிமையாளர்கள் தரப்பில் பேச்சு நடந்தது. தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதுவரை வழங்கவில்லை. நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, குறிப்பிட்டார்.

நீதிபதி, ஜி.ஆர். சுவாமிநாதன், திருச்சி கலெக்டர், தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, செப்., 23க்கு ஒத்தி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X