பொது செய்தி

இந்தியா

தி.மு.க., - எம்.பி., செல்வத்துக்கு கொரோனா தொற்று

Added : செப் 15, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

பார்லிமென்ட் வளாகத்தில் நடந்த, 'நீட்' எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற காஞ்சிபுரம் திமு.க., - எம்.பி., செல்வத்துக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், தி.மு.க.,வின் மற்ற எம்.பி.,க்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
'நீட்' நுழைவுத் தேர்வுக்கு எதிராக, பார்லிமென்டின் பிரதான நுழைவு வாயிலில் அமைந்துள்ள காந்தி சிலை அருகே, தி.மு.க., கூட்டணி கட்சி களின் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதில், டி.ஆர்.பாலு, ராஜா, கனிமொழி உள்ளிட்ட தி.மு.க.,- எம்.பி.,க்கள், 'மாணவர்களை கொல்லாதே, நீட் தேர்வை ரத்து செய்' என கோஷங்கள் எழுப்பிய பின், சபைக்குள் சென்றனர். அங்கு, ஜீரோ நேரத்தில், டி.ஆர்.பாலு பேசியதாவது:சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் அடிப்படையில், நீட் தேர்வு நடத்தப்படுகிறது. எனவே, மாநில கல்வி திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு, இத்தேர்வு கடினமாக உள்ளது.

பள்ளி இறுதித் தேர்வில், சிறப்பான மதிப்பெண் பெற்ற பிறகும், நீட் என்ற பெயரில் மற்றொரு தேர்வு எதற்கு. இத்தேர்வு குறித்து புரிந்து கொள்ள முடியாமல் மாணவர்கள் திண்டாடுகின்றனர். அச்சம், பீதி மனஅழுத்தம் காரணமாக, பலர் தற்கொலை செய்துகொள்கின்றனர். நாட்டின் எதிர்கால மருத்துவர்களை, இவ்வாறு பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

இதற்கிடையே, நேற்று முன்தினம், எம்.பி.,க் களுக்கு நடத்திய கொரோனா பரிசோதனை முடிவுகள், 24 மணி நேரம் கழித்து வந்து சேர்ந்த நிலையில், காஞ்சி புரம், திமு.க.,- எம்.பி., செல்வத்துக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். இதையடுத்து, அதிகாரிகள் ஆலோசனைப்படி, அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுஉள்ளதாக தெரிவித்தார்.இதனால், ஆர்ப்பாட்டத்தில் அவருடன் பங்கேற்ற மற்ற எம்.பி.,க்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, டில்லியில், தி.மு.க., - எம்.பி.,க்கள் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
15-செப்-202016:24:13 IST Report Abuse
Baskar எனக்கு தெரியும் அப்பவே இந்த தலையாட்டி பொம்மைகள் கையில் பதாகைகளை ஏந்தி கொண்டு ஒன்றாக நிற்கிறதே இந்துக்களில் ஒருத்தனுக்கு கூடவா கோரோனோ இல்லை என்று. அப்போ சோதனை செய்ததில் எதோ கோளாறு. விரைவில் கோரோனோ வந்தாலும் வரலாம் ஜாக்கிரதை அதுவும் ஆர். எஸ்.பாரதி பாலு இளங்கோவன் இன்னும் இளமையாக இருக்க கூடியவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X