சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நடிகர் சூர்யா மீது கமிஷனரிடம் புகார்

Added : செப் 15, 2020
Share
Advertisement

மதுரை : 'நீட்' தேர்வு விவகாரத்தில், நீதிபதிகளையும், நீதிமன்றத்தையும் அவமதிக்கும் வகையில் பேசியதாக, நடிகர் சூர்யா மீது, மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் முத்துகுமார் என்பவர் அளித்த புகார்:சமீப காலமாக, நீதித் துறையையும், நீதிபதிகளையும் அவமதிப்பது, மாண்பை சீர்குலைப்பது, கேலிக்கூத்தாக சித்தரிக்கும் போக்கு, நடிகர் - நடிகையர் இடையே விஷச்செடிகளாக வளர்ந்து வருகிறது.நீட் தேர்வு தொடர்பாக, பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு, தேர்வு நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.இது தொடர்பாக, செப்., 13ல் நடிகர் சூர்யா, நீதிமன்றம் குறித்தும், நீதிபதிகள் குறித்தும் சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, நீட் தேர்வு விவகாரத்தில், சில மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், மேலும் மாணவர்களை தற்கொலை எண்ணத்திற்கு துாண்டும் வகையில், சூர்யாவின் கருத்து உள்ளது. அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, புகாரில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X