அ.தி.மு.க.,வினர் ரகளை 106 பேர் மீது வழக்கு

Added : செப் 15, 2020 | |
Advertisement
திருச்சி : அ.தி.மு.க., ஆலோசனைக் கூட்டத்தில் ரகளையில் ஈடுபட்ட விவகாரத்தில், 106 பேர் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருச்சி வடக்கு மாவட்ட, அ.தி.மு.க., சார்பில, இளைஞர் பாசறை ஆலோசனைக் கூட்டம், நேற்று முன்தினம், ஸ்ரீரங்கம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில், பிற்படுத்தப் பட்டோர் நலத் துறை அமைச்சர் வளர்மதி, இளைஞர் பாசறை மாநில செயலர் பரமசிவம், வடக்கு

திருச்சி : அ.தி.மு.க., ஆலோசனைக் கூட்டத்தில் ரகளையில் ஈடுபட்ட விவகாரத்தில், 106 பேர் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திருச்சி வடக்கு மாவட்ட, அ.தி.மு.க., சார்பில, இளைஞர் பாசறை ஆலோசனைக் கூட்டம், நேற்று முன்தினம், ஸ்ரீரங்கம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில், பிற்படுத்தப் பட்டோர் நலத் துறை அமைச்சர் வளர்மதி, இளைஞர் பாசறை மாநில செயலர் பரமசிவம், வடக்கு மாவட்டச் செயலர் பரஞ்ஜோதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.கட்சி பதவி கிடைக்காத விரக்தியில், 50க்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் புகுந்து ரகளையில் ஈடுபட்டு, சேர்களை அடித்து நொறுக்கினர். அங்கிருந்த சில நிர்வாகிகள் மீதும் தாக்குதல் நடந்தது.சம்பவம் தொடர்பாக, ஸ்ரீரங்கம் பகுதி, அ.தி.மு.க., செயலர் திருப்பதி, போலீசில் புகார் அளித்தார்.

திருச்சி வடக்கு மாவட்ட அ.தி.மு.க., மீனவரணி செயலர் கண்ணதாசன் உட்பட, 106 பேர் மீது, ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X