குடிநீர் இணைப்பில் முறைகேடு? ஊராட்சியில் சலசலப்பு

Added : செப் 15, 2020
Share
Advertisement
 குடிநீர் இணைப்பில் முறைகேடு? ஊராட்சியில் சலசலப்பு

திருப்பூர்:பெருமாநல்லுார் ஊராட்சியில், குடிநீர் இணைப்பு வழங்கியதில், முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பெருமாநல்லுார் ஊராட்சியில் உள்ள, அ.தி.மு.க.,-பா.ஜ., - தே.மு.தி.க.,- இ.கம்யூ., நிர்வாகிகள், வார்டு உறுப்பினர்கள், நேற்று கலெக்டரிடம் வழங்கிய மனு;ஊராட்சி தலைவர் சாந்தாமணி, துணை தலைவராக உள்ள அவரது கணவர் வேலுசாமி ஆகியோர் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி, 150 குடிநீர் இணைப்பு வழங்கியுள்ளனர்; கலெக்டர் அனுமதி பெறவில்லை. பயனாளிகளிடம், தலா, 6,200 ரூபாய் வசூலித்துள்ளனர்; ஆனால், 2,200 ரூபாய்க்கு மட்டுமே கணக்கு காண்பித்துள்ளனர். எஞ்சிய தொகையான, 6 லட்சம் ரூபாயை, கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறியுள்ளனர்.இதுகுறித்து, ஊராட்சி தலைவரிடம் கேட்டபோது, ''பயனாளிகளிடம் வசூலித்த, 6 லட்சம் ரூபாய், எங்களிடம் தான் உள்ளது. அந்த தொகை மூலம், வளர்ச்சிப்பணி மேற்கொள்ள, ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் அனுமதி கேட்டுள்ளோம்; முறைகேடு செய்யவில்லை,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X