பொது செய்தி

தமிழ்நாடு

உழவர் சந்தை பார்க்கிங் இடம் மாற்ற எதிர்பார்ப்பு

Added : செப் 15, 2020
Share
Advertisement

திருப்பூர்:உழவர் சந்தை, தென்னம்பாளையம் மார்க் கெட்டில், டூவீலர் பார்க்கிங் முறைப்படுத்த வேண்டும்,' என்ற கோரிக்கை வலுத்துள்ளது.திருப்பூர், தெற்கு உழவர் சந்தை முன், தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு செல்லும் வழியில், ரோட்டின் இருபுறமும் டூவீலர் நிறுத்தப்படுகிறது. ரோட்டை ஆக்கிரமித்து, சிறு கடைகளும் அமைக்கப்படுகின்றன. இதனால், வாகனத்தை பார்க்கிங் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.எதிர் எதிரே வாகனம் வரும்போது, பாதசாரிகள், நடந்து செல்ல வழியில்லாமல் நிற்கின்றனர். ஞாயிறு விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில், தென்னம்பாளையம் மார்க்கெட், சந்தைக்கு கூட்டம் அதிகரிக்கும்; மணிக்கணக்கில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.திருப்பூர், உழவர் சந்தை வளாகத்துக்குள்ளும், ஏ.பி.டி., ரோட்டிலும் இடம் காலியாக உள்ளது. வாகனங்களை முறைப்படுத்த ஏ.பி.டி., ரோட்டில் நிறுத்தினால், சந்தை மற்றும் மார்க்கெட்டுக்கு செல்லும் வழியில், நெரிசல் ஏற்படாது; இடையூறும் தவிர்க்கப்படும். சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X