பொது செய்தி

தமிழ்நாடு

விதை நடவு பணி துவக்கம்

Added : செப் 15, 2020
Share
Advertisement

அவிநாசி:அவிநாசி தாமரைகுளத்தில், 10 ஆயிரம் விதை நடும் திட்டம் துவங்கப்பட்டது.அவிநாசி பேரூராட்சி நிர்வாகம், பல்லடம் வளம் பவுண்டேசன் அமைப்பு சார்பில், அவிநாசி தாமரைக்குளத்தில், 10 ஆயிரம் பனை விதை நடும் நிகழ்ச்சி துவங்கப்பட்டது. ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜ், சென்னை சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் ஆறுமுகம் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.முதல் நாள், இரண்டாயிரம் பனை விதை நடப்பட்டன. அவிநாசி சமூக அமைப்பினர், தன்னார்வலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பனை விதை, லாரியில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X