பொது செய்தி

தமிழ்நாடு

இடிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு

Added : செப் 15, 2020
Share
Advertisement
 இடிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு

திருப்பூர்:திருப்பூர், பூ மார்க்கெட்டில் கோவிலை ஒட்டியுள்ள இடத்தை மாநகராட்சியினர் இடிக்க முற்பட்ட நிலையில், இந்து சமய அறநிலையத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதி களில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. திருப்பூர், விஸ்வேஸ்வரர் கோவில் முதல், பூ மார்க்கெட் வரை சாக்கடை கால்வாய் பணி நடந்து வருகிறது.பூ மார்க்கெட்டில் உள்ள செல்வவிநாயகர் கோவில் அருகே, 2 அடி இடத்தை, கால்வாய் பணிக்காக இடிக்க, மாநகராட்சியினர் திட்டமிட்டனர். இதற்கு, இந்து சமய அறநிலையத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதற்கிடையில், திருப்பூர் மாநகராட்சி மூன்றாவது மண்டல இளநிலை பொறியாளர் கோவிந்த பிரபாகரன் உள்ளிட்ட அதிகாரிகள் அந்த இடத்தை சர்வே செய்ய, நேற்று மாலை அங்கு சென்றனர். 'கோவிலுக்கு சொந்தமான இடத்தை இடிக்கக்கூடாது' என, இந்து சமய அறநிலையத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.வீரராகவப் பெருமாள் கோவில் செயல் அலுவலர் சீனிவாசன் உட்பட பலர் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X