பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் குறை தீர்க்கும் முகாம் திங்கள் தோறும் நடத்த முடிவு

Added : செப் 15, 2020
Share
Advertisement

குன்னுார்:ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் திங்கள் தோறும் மனுநீதி நாள் கூட்டம் நடந்து வருகிறது.இந்நிலையில், கொரோனா நடவடிக்கையாக, மாவட்டத்தில் உள்ள, தாலுகாக்களில், நேற்று முதல் மனுநீதிநாள் கூட்டம் துவக்கப்பட்டது. குன்னுாரில் நடந்த, முகாமை மாவட்ட கூடுதல் கலெக்டர் ரஞ்சித்சிங் தலைமை வகித்து துவக்கி வைத்தார். 15 பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வீட்டுமனை பட்டா, முதியோர் தொகை உட்பட, 10 மனுக்கள் பெறப்பட்டன.* பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு தாசில்தார் மகேஸ்வரி தலைமை வகித்தார். சமூக நல பாதுகாப்பு திட்ட தாசில்தார் லோகநாதன், வட்ட வழங்கல் அலுவலர் சரவணன் முன்னிலை வகித்தனர். இதில் பல்வேறு குறைகள் அடங்கிய, 12 மனுக்கள் பெறப்பட்டன.* கோத்தகிரி தாலுகா அலுவலக வளாகத்தில் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், மனுநீதி நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில், மனு அளிக்க வந்தவர்கள் 'சானிடைசர்' பயன்படுத்தி, சமூக இடைவெளியில் அமர வைக்கப்பட்டனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல தாசில்தார் குமாரராஜன், தனி வட்டாட்சியர் தனலட்சுமி, வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணி ஆகியோர், பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றனர்.இனி அந்தந்த தாலுகாக்களில் திங்கள்தோறும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X