சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருப்பூர் நிறுவனம் ரூ.2.2 கோடி மோசடி

Added : செப் 15, 2020
Share
Advertisement

கோவை : திருப்பூர் பனியன் நிறுவனம், 2.2 கோடி ரூபாய், ஜி.எஸ்.டி., மோசடி செய்தது தொடர்பாக, அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனம், ஜி.எஸ்.டி., மோசடியில் ஈடுபட்டதாக, கோவை, உக்கடத்தில் உள்ள மண்டல, ஜி.எஸ்.டி., புலனாய்வு பிரிவுக்கு புகார் வந்தது. தொடர்ந்து, அதிகாரிகள், பனியன் நிறுவனத்தில் நேரடி ஆய்வு நடத்தினர்.அப்போது, 40 கோடி ரூபாய் மதிப்புள்ள பனியன் துணிகளை, 'பில்' போடாமல் விற்பனை செய்து, 2.2 கோடி ரூபாய், ஜி.எஸ்.டி., வரியை அரசுக்கு செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டது, தெரியவந்தது.கணக்கில் வராத, 2.7 கோடி ரூபாய் மதிப்புள்ள பனியன் துணிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

நிறுவன உரிமையாளரிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.இது தொடர்பாக, அறிக்கை வெளியிட்ட ஜி.எஸ்.டி., அதிகாரிகள், பனியன் நிறுவனம் மற்றும் உரிமையாளர் பெயர் விபரத்தை வெளியிடவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X