பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவால் முடங்கிய 'டிராவல்ஸ்': கைகொடுத்த ஆன்லைன் 'மளிகை'

Added : செப் 15, 2020
Share
Advertisement
கொரோனாவால் முடங்கிய 'டிராவல்ஸ்': கைகொடுத்த ஆன்லைன் 'மளிகை'

விருதுநகர் :காலங்களின் மாற்றத்திற்கு ஏற்ப வணிகமும் பல்வேறு மாறுதல்களை சந்தித்து விட்டது. பொருளாதார மந்த நிலையால் சுய தொழிலே நாட்டின் அவசிய தேவையாக மாறி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் தயாரிக்கும், உற்பத்தியாகும் பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் தேசம் வளர்ச்சி பெறுகிறது. வெளிநாட்டு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் ஆன்லைன் ஷாப்பிங்கில் விருதுநகரை சேர்ந்த இளைஞர் ராஜாபவளம் அசத்தி வருகிறார்.சுய தொழில் முனைவோராக ஆன்லைன் ஷாப்பிங்கில் ஈடுபட்டு வருகிறார். டிராவல்ஸ் நடத்தி வந்த இவர் கொரோனா ஊரடங்கால் முடக்கப்பட்டார். இதையடுத்து மே துவக்கத்தில் வாகனம் மூலம் நடமாடும் பலசரக்கு கடை நடத்தினார். சமூக இடைவெளியை பேணுவதற்காக கோரல் சூப்பர் மார்ட் எனும் செயலி தயாரித்து ஆன்லைன் ஷாப்பிங்கை துவக்கி உள்ளார்.
வாடிக்கையாளர் அதிகரிப்பு

ஊரடங்கை முன்னிட்டு உறவினர் பழனிக்குமரன் ஆலோசனைபடி வீடு தேடி பலசரக்கு விற்றேன். செயலி மூலம் ஆன்லைன் ஷாப்பிங் மேற்கொள்ள திட்டமிட்டேன். இது பலரிடம் வரவேற்கை பெற்றுள்ளது. ரூ.20 டெலிவரி கட்டணம் வசூலிக்கிறேன். ரூ. 500-க்கு மேல் ஆர்டர் செய்வோருக்கு டெலிவரி இலவசம், மொத்த விலைக்கடைகள், சிறு தொழில் முனைவோரிடம் சரக்குகள் பெற்று நியாய விலைக்கு விற்கிறேன். .ராஜா பவனம் , ஆன்லைன்தொழில்முனைவோர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X