சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கந்து வட்டி நபர் கொலைஆறு பேர் கைது

Added : செப் 15, 2020
Share
Advertisement

கோவை : கோவையில், பட்டப்பகலில் ஒருவர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவத்தில், ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை, ஆவாரம்பாளையத்தைச் சேர்ந்தவர் பிஜு, 40. ராம் நகரில், சோடா கடை நடத்தி வந்தார். இவர், வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார்.நேற்று முன்தினம், கடை முன் நின்று கொண்டிருந்த போது, ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களால் தாக்கியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்தது.காட்டூர் போலீசார் விசாரித்தனர். நண்பர்கள் தகராறை, சமரசம் செய்து வைக்க முயன்றபோது ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக, பிஜு கொலை செய்யப்பட்டது தெரிந்தது.'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, ராம்நகர் பகுதியைச் சேர்ந்த ஆறு ஆண்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

பிஜுவின் உடல், நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.கோவை அரசு மருத்துவ மனையில், உறவினர்கள், நண்பர்கள் கூடியதால், 100க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X