பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை - சென்னை மார்க்கத்தில் அதிவேக சிறப்பு ரயில் சோதனை

Added : செப் 15, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 மதுரை - சென்னை மார்க்கத்தில் அதிவேக சிறப்பு ரயில் சோதனை

விருத்தாசலம் : மதுரை - சென்னை இருவழி ரயில் பாதையில், ஓ.எம்.எஸ்., சிறப்பு ரயில் மூலம் அதிவேக ரயில்கள் இயக்கத்துக்கான சோதனை நடந்தது.

பயண நேரத்தை குறைக்கும் வகையில், ரயில்களின் வேகத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, வழக்கமாக ரயில்கள் செல்லும், 100 - 110 கி.மீ., வேகத்தை, 120 கி.மீ., வேகமாக உயர்த்த திட்டமிட்டு, முதல் கட்டமாக, சென்னை - மதுரை இருவழி ரயில் பாதையில், கடந்த, 11ம் தேதி சோதனை துவங்கியது.உறுதித்தன்மைஓ.எம்.எஸ்., எனப்படும், 'ஆசிலேஷன் மானிடரிங் சிஸ்டம்' சிறப்பு ரயில் மூலம், 135 முதல், 140 கி.மீ., வேகத்தில், 'டிராக்' சோதனை செய்யப்பட்டது.

கூடுதல் வேகத்தில், ஓ.எம்.எஸ்., சிறப்பு ரயில் சென்றபோது, தண்டவாளத்தின் உறுதித்தன்மை, செயல்பாடுகள் கணக்கிடப்பட்டன.தொடர்ந்து, நேற்று மதுரை - சென்னை மார்க்க ரயில் பாதையில், சோதனை நடத்தப்பட்டது. காலை, 8:30 மணியளவில், மதுரையில் இருந்து புறப்பட்ட சிறப்பு ரயில், 10:20 மணிக்கு திருச்சிக்கும், பகல், 11:30 மணியளவில், விருத்தாசலம் ரயில் நிலையத்தையும் கடந்து சென்றது.விரைவில் அறிவிப்புசென்னை - மதுரை மார்க்கத்தில், இருவழி பாதையிலும் தனித்தனியே நடத்தப்பட்ட சோதனை முடிவுகளை, ரயில்வே நிர்வாகம் கணக்கிடும். 'அதன் அடிப்படையில், ரயில்களின் வேகத்தை அதிகரிப்பது குறித்து, விரைவில் அறிவிப்பு வெளியாகும்' என ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anvardeen - chennai,இந்தியா
16-செப்-202015:21:41 IST Report Abuse
Anvardeen மதுரை டு கன்யாகுமரிய .. அதை நீங்க கேரளா காரன் கிட்ட தான் கேட்கணும் ...திருநெல்வேலி கன்யாகுமரி நகர்க்கோயில் எல்லாமே கேரளாக்காரன் கையில் .. இதுக்கெல்லாம் திருடர்கள் கூட்டம் கேட்க மாட்டார்கள் என்ன அதில் பணம் வராதே ..... கன்னியாகுமாரி யில் விமான நிலையம் அமைக்க விடமாட்டான் கேரளாக்காரன் ... ஆனான் கண்யமாரியால் திருவனந்தபுரம் விமான நிலையம் செழிக்கிறது .....
Rate this:
Cancel
N S Sankaran - Chennai,இந்தியா
15-செப்-202016:53:06 IST Report Abuse
N S Sankaran விரைவில் மதுரை சென்னையிடையே பயண நேரம் குறையும் என்று எதிர்பார்க்கலாம். ஆமாம், மதுரை கன்யாகுமரி இரட்டைப் பாதையின் நிலை என்ன?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X