பொது செய்தி

தமிழ்நாடு

'ஆக்சிஜன்' வசதி படுக்கை அதிகரிக்க நடவடிக்கை

Added : செப் 15, 2020
Share
Advertisement

அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனைகளில், 'ஆக்சிஜன்' வசதியுடன் கூடிய படுக்கை வசதியை அதிகரிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளிகள் பலர், மூச்சு திணறலால் பாதிக்கப்படுவதால், படுக்கையில், ஆக்சிஜன் வசதி தேவைப்படுகிறது. இதனால், அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் அரசு மருத்துவமனைகளில், ஆக்சிஜன் இணைப்பு கொண்ட படுக்கை வசதியை அதிகரிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மருத்துவ பணிகள் துறையினர் கூறியதாவது: மருத்துவ மனையில் உள்ள படுக்கைகளில், ஆக்சிஜன் குழாய் இணைப்பு பொருத்தும் பணியை, பொதுப் பணித் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு படுக்கையிலும் ஆக்சிஜன் குழாய், அழுத்தமான காற்று வரும் குழாய், வெற்றிட குழாய் என, மூன்று குழாய் அமைக்கப்பட்டு வருகிறது.

சில தலைமை மருத்துவமனைகளில், திரவநிலை ஆக்சிஜன் பயன்பாட்டில் உள்ள நிலையில், அவற்றின் பயன்பாட்டை விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X