பொது செய்தி

தமிழ்நாடு

கிருஷ்ணகிரி எம்.பி., செல்லகுமாருக்கு தொற்று

Added : செப் 15, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி தொகுதி, காங்., - எம்.பி., செல்லகுமாருக்கு, கொரோனா தொற்று உறுதியானது.
கிருஷ்ணகிரி தொகுதி, காங்., - எம்.பி., செல்லகுமார், 58; சென்னை அண்ணா நகரில் வசித்து வருகிறார். இவருக்கு, மூன்று நாட்களுக்கு முன் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதியானது. இது குறித்து அவர், 'டுவிட்டர்' பக்கத்தில், தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஒரு வாரமாக, தன்னுடன் நேரடியாக தொடர்பில் இருந்தவர்கள், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி இருந்தார். தற்போது அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரிடம் கேட்டபோது, ''நான்கு நாட்களுக்கு முன், சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றேன். வீட்டிற்கு திரும்பும்போது, மழையில் நனைந்ததோடு, 'ஏசி' வாகனத்தில் பயணித்ததால், சளியால் பாதிக்கப்பட்டேன். ''தற்போது நன்றாக உள்ளேன். இன்னும் மூன்று நாட்களில், வீடு திரும்புவேன்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X