வருங்கால வைப்பு நிதியில் ரூ.39,403 கோடி விடுவிப்பு

Updated : செப் 15, 2020 | Added : செப் 15, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
 வருங்கால வைப்பு நிதியில்ரூ.39,403 கோடி விடுவிப்பு

புதுடில்லி :கொரோனா ஊரடங்கு காலமான, மார்ச், முதல் ஆக., வரை, தொழிலாளர்கள் பலரும், தங்கள் வருங்கால வைப்பு நிதியில் இருந்து, 39 ஆயிரத்து, 403 கோடி ரூபாயை திரும்ப பெற்றுள்ளனர் என, மத்திய தொழிலாளர் துறை அமைச்சர், சந்தோஷ் கங்வார், நேற்று லோக்சபாவில் கூறினார்.
லோக்சபாவில், மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், கொரோனா பரவலால், தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்த கேள்விக்கு, மத்திய தொழிலாளர் துறை அமைச்சர், சந்தோஷ் கங்வார், எழுத்து மூலம் அளித்த பதில் வருமாறு:


latest tamil news




கொரோனா பரவலால், முழு ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில், மார்ச், 25ம் தேதி முதல், ஆக., 31 வரை, தொழிலாளர்கள் பலரும், தங்கள் வருங்கால வைப்பு நிதியில் இருந்து, 39 ஆயிரத்து, 403 கோடி ரூபாயை திரும்ப பெற்றுஉள்ளனர்.
இதில் அதிகபட்சமாக, மஹா.,வில், 7,837 கோடி ரூபாயும், கர்நாடகாவில், 5,743 கோடி ரூபாயும், புதுச்சேரி மற்றும் தமிழகத்தில், 4,984 கோடி ரூபாயும் திரும்ப பெறப்பட்டுள்ளது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balagurusamy Ayyanadar - Thirumangalam, Madurai ,இந்தியா
15-செப்-202012:54:52 IST Report Abuse
Balagurusamy Ayyanadar தொழிலாளர் வைப்பு நிதிக்கு தனியார் நிறுவனங்களில் பணி புரிவோரின் பங்களிப்பும உண்டு. ஆனால் அவர்களுக்கு, பணி ஓய்வுக்குப் பிறகு அளிக்கப்படும் ஓயவூதியம் இருக்கிறதே, அதை வெளியில் சொல்லவே மனம் கூசுகிறது. ஆளும் மற்றும் எதிர்க் கட்சியின் MLA / MP க்கள் அவரவர் சம்பள உயர்வுகளை தவறாமல் பெற்றுக் கொள்கின்றனர். ஆனால் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்று ஒய்வூதியம் பெறுபவர்களைப் பற்றி யாருமே சிந்திப்பதில்லை. தற்போதைய விலைவாசி, சூழ்நிலைக்கு ஏற்ப அவர்களுக்கும் நியாயமான ஓய்வூதியம் கிடைக்க மத்திய, மாநில அரசு மற்றும் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
Rate this:
Cancel
15-செப்-202012:21:29 IST Report Abuse
ஆப்பு ரிசர்வ் வங்கியை துடைச்சாச்சு. எல்.ஐ.சி யின் பங்குகளை விக்க முடிவு எடுத்தாச்சு. தொழிலாளர்கர்களின் வேலையை முடக்கி இப்போ அவிங்க சேமிப்பிலும் கை வெச்சாச்சு. அடுத்தது அந்நிய செலாவணி கொஞ்சம் வுட்டு வெச்சிருக்காங்க. நாட்டின் சேமிப்பை காலி பண்ணாம ஓயமாட்டாங்க போலிருக்கு.
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
15-செப்-202010:32:16 IST Report Abuse
பாமரன் இந்த பிஎஃப் வைப்புநிதி சம்பந்தமான ஒரு செய்தியை ஊடகங்களால் திட்டமிட்டு மறைக்கப்பட்டு வருகிறது... அதாவது மோடி ஆட்சிக்கு வந்தபின் பொதுமக்கள் செலுத்திய பிஎஃப் பணம் சும்மாத்தான் இருக்கு... LIC போல அதை பங்கு சந்தையில் முதலீடு செய்யறோம்னு முடிவெடுக்க அதுக்கு நம்ம பகோடாஸ் கூட ஆஹா ஓஹோ ஏஹே ஹை...தனன்னன்ன தனன்னன்னத்தானே பாடுனாய்ங்க... இதுவரை ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்த வகையில் வந்த நஷ்டம் சென்ற வருடத்தில் மட்டுமே ஐந்தாயிரம் கோடிக்கு மேல்... இதுல கவனிக்க வேண்டிய விஷயம் என்ன்ன்னா இதே பங்கு சந்தையில் இதே காலகட்டத்தில் இரண்டு குஜ்ஜூ தொழிலதிபர்கள் சொத்துக்கள் ஏறத்தாழ நான்கு மடங்கு அதாவது பல்லாயிரக் கணக்கான கோடி அதிகரித்துள்ளது... இந்த நஷ்டம் காரணமாக இன்றைக்கு ஒரு சாதாரண இந்தியனுக்கு உழைத்து சேமித்த காசுக்கு கிடைக்கும் அதிகபட்ச வட்டியான தற்போதைய 8.5 சதவீதத்திற்கும் கூடிய சீக்கிரம் சங்கு ஊதப்படலாம்... இந்த மாதிரி மக்கள் நலன் சம்பந்தப்பட்ட மேட்டரை விட்டுட்டு SSR, கங்கனா, ஜிஜியோட மயிலாட நானாட மாதிரி தேசமுக்கியமான பிரச்சினைகள் வச்சிக்கிட்டு இந்த விலைபோன ஊடகங்கள் காலம் தள்ளுதுங்க...😠😠
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X