சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி திருமணத்தை நிறுத்திய காதல் கணவர்

Added : செப் 15, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

நாகர்கோவில் : மனைவிக்கு நடக்க இருந்த திருமணத்தை, காதல் கணவர், கடைசி நேரத்தில் நிறுத்தினார்.

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே, வெட்டுவெந்நியைச் சேர்ந்தவர் ஷாமினி, 23; பி.எஸ்சி., நர்சிங் முடித்துள்ளார். படிக்கும் போது, தர்மபுரியைச் சேர்ந்த சக மாணவர் ராஜுவை காதலித்தார்.கடந்த, 2019 செப்டம்பரில், தோழியின் வீட்டுக்கு செல்வதாக கூறி, தர்மபுரி சென்ற ஷாமினி, அங்கு ஒரு கோவிலில், ராஜுவை திருமணம் செய்து கொண்டார். அலைபாயுதே சினிமா பாணியில், இருவரும் அவரவர் வீட்டில் இருந்தனர்.இந்நிலையில், ஷாமினிக்கு பெற்றோர் வேறு மாப்பிள்ளை பார்த்து, திருமணத்தை உறுதி செய்தனர்.

இதையடுத்து ராஜு, தன் மனைவிக்கு வேறு நபருடன் திருமணம் நடக்க இருப்பதாக, மகளிர் போலீசில் புகார் செய்தார்.நேற்று முன்தினம், வரவேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது, ராஜு, மகளிர் போலீசாருடன் அங்கு சென்று, திருமணத்தை நிறுத்தினார். பெண் மற்றும் பெற்றோரை, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். ஷாமினி, தனக்கு திருமணம் நடந்ததை ஒப்புக் கொண்டார்.இதற்கிடையில், 'திருமண ஏற்பாடுக்கான செலவு மற்றும் நஷ்டஈடு தர வேண்டும்' என, மணமகன் வீட்டாரும் புகார் செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ravichandran - Hosur,இந்தியா
15-செப்-202012:26:07 IST Report Abuse
ravichandran இவர் புதுமை பெண்ணா?? புரட்சி பெண்ணா??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X