சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'கவரிங்' நகைகளுக்கு கடன்: வங்கியில் ரூ. 67 லட்சம் ரூபாய் மோசடி

Added : செப் 15, 2020
Share
Advertisement

நாகர்கோவில் : வங்கியில், 'கவரிங்' நகைகளுக்கு கடன்கள் வழங்கி, 67 லட்சம் ரூபாய் மோசடி நடந்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல்லில், யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளை உள்ளது. இவ்வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை பார்த்தவர், பாலசுப்பிரமணியம் 25.கஞ்சா மற்றும் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக, ஏப்., 7ல், தக்கலை போலீசார், இவரை கைது செய்தனர். இதையடுத்து, அவர் வழங்கிய நகை கடன்களை வங்கி ஆய்வு செய்தது. அதில், 33 கடன்கள், 'கவரிங்' நகைகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது தெரிந்தது.அவர் மீது, போலீசில் புகார் செய்த வங்கி நிர்வாகம், 33 வாடிக்கையாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியது.

வங்கிக்கு, 'டிப்டாப்'பாக வரும் பால சுப்பிரமணியம், இளம் பெண்களை, தன் வலையில் வீழ்த்தி, கவரிங் நகை மூலம், 67 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.இது குறித்து, கலெக்டரிடம் நேற்று மனு கொடுத்த பெண்கள் கூறியதாவது:நாங்கள், அந்த வங்கியில் நகை கடன், தொழில் கடன் பெற்றுள்ளோம். நாங்கள் வங்கிக்கு செல்லும் போது, நகை மதிப்பீட்டாளர், எங்களிடம் சில படிவங்களில் கையெழுத்து வாங்குவார்.தற்போது, மேலாளர் சொன்ன பின் தான், எங்களுக்கு கவரிங் நகை கடன் பற்றி தெரிய வந்துள்ளது. இதில், எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. இது பற்றி, உரிய விசாரணை நடத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X