பொது செய்தி

தமிழ்நாடு

பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு

Added : செப் 15, 2020
Share
Advertisement

தேக்கடி : பெரியாறு அணை நீர்பிடிப்பில் தொடர்ந்து ஐந்து நாட்களாக மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரித்து நீர் மட்டம் 126.05 அடியாக உயர்ந்தது.

நேற்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1703 கன அடியாக இருந்தது. நீர்மட்டம் 125.85 அடியில் இருந்து 126.05 அடியாக (மொத்த உயரம் 152 அடி) உயர்ந்தது. தமிழக பகுதிக்கு குடிநீர், சாகுபடிக்காக 1200 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. நீர் இருப்பு 3845 மில்லியன் கன அடியாகும். பெரியாறில் 26, தேக்கடியில் 28 மி.மீ., மழை பதிவானது. நேற்றும் மழை தொடர்ந்ததால் அணை நீர்மட்டம் மேலும் உயரும் வாய்ப்புள்ளது. 2019 இதே நாளில் அணையின் நீர்மட்டம் 130 அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வைகை அணை நீர்மட்டம் 61.68 அடியாக (மொத்த உயரம் 71 அடி) இருந்தது. நீர்வரத்து 910 கன அடியாகவும், நீர்திறப்பு 72 கன அடியாகவும் இருந்தது. நீர் இருப்பு 3931 மில்லியன் கன அடியாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X