அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., பொய் பிரசாரம் இப்ராஹிம் பாய்ச்சல்

Added : செப் 15, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

புதுக்கோட்டை : ''ஓடாத பட இயக்குனர்கள் மற்றும் சில நடிகர்களை வைத்து, மத்திய அரசு குறித்து, மக்களிடம், தி.மு.க., தொடர்ந்து பொய் பிரசாரம் செய்து வருவது முறியடிக்கப்படும்,'' என, தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் தலைவர் இப்ராஹிம் தெரிவித்தார்.

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை விளக்கும் வகையில், புதுக்கோட்டை கடை வீதிகளில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கிய பின், நிருபர்களிடம் இப்ராஹிம் கூறியதாவது:தி.மு.க., அணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் மற்றும் ஓடாத பட இயக்குனர்கள், சில நடிகர்களை வைத்து, மத்திய அரசு மீது, தி.மு.க., தொடர்ந்து பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.'நீட்' தேர்வு குறித்து, மாணவர்களிடம் பயத்தை உண்டாக்கியும், மக்கள் மனதில், பா.ஜ., மீது வெறுப்பை துாண்டும் வகையிலும், தி.மு.க., தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து பிரசாரம் செய்கிறது.

நீட் பயத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டால், அவர்களை ஊக்குவித்து, அவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கி வருவது, அ.தி.மு.க.,வின் ஓட்டு வங்கியை காப்பாற்றிக் கொள்ளத்தான். இதுபோன்ற செயல்கள் வேதனை அளிக்கின்றன.நீட் தேர்வு குறித்து, மாணவர்கள் மத்தியில் உள்ள பயத்தை போக்க, தமிழக அரசு பல கோச்சிங் சென்டர்களை துவங்கி, மாணவர்களின் பயத்தை போக்கி, நீட் தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும். நீட் தேர்வு பயத்தால், மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதை ஊக்குவிக்க கூடாது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
15-செப்-202016:06:22 IST Report Abuse
Baskar appadi avar பிரெஞ்சு மொழி பேசுபவராயிருந்தால் என்னிடம் பேச சொல்லுங்கள் தயிரியம் இருந்தால்.
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
15-செப்-202002:38:30 IST Report Abuse
Baskar அய்யா இதெல்லாம் ஒரு பெரிய விஷயமில்லை. ஸ்டாலின் பேச்சை கேட்டு உங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பெட்டிக்கும் ஆசை பட்க்கிறார்கள் அது தான் கேடு விளைவிப்பது. முதலில் அவர்களை திருத்துங்கள்.
Rate this:
Chennai B.S - Chennai,இந்தியா
15-செப்-202012:57:40 IST Report Abuse
Chennai B.Sஇப்ராஹிம் பாய் அப்படியா பிரான்ஸ் போய் நம்ம பாஸ்கர் பாருங்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X