பொது செய்தி

தமிழ்நாடு

சேத்தியாத்தோப்பு ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக மேம்படுத்த கோரிக்கை

Added : செப் 15, 2020
Share
Advertisement

சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பொதுமருத்துவமனையாக மேம்படுத்த வேண்டும் என அரசுக்கு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சேத்தியாத்தோப்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டு இயங்கி வருகிறது.இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவங்கள் மற்றும், புற நோயாளிகளுக்கு பொது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கடந்த 40 ஆண்டுகளுக்கும் முன் இருந்த மக்கள் தொகையை விட தற்போது பல மடங்கு கூடியுள்ளது. இதனால் தற்போது இந்த மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு 200க்கும் மேற்பட்ட புற நோயாளிகளும், 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், முதியோர்கள், சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.சேத்தியாத்தோப்பு வழியாக சென்னை-கும்பகோணம் சாலை, விருத்தாசலம்- பரங்கிப்பேட்டை சாலை, தஞ்சாவூர்-விக்கிரவாண்டி புதிய பைபாஸ் சாலைகள் உள்ளதால் விபத்துக் காலங்களில் அவசரத் தேவைகளுக்கு சிதம்பரம், விருத்தாசலம், கடலுார் அரசு மருத்துவமனைகளுக்கு செல்லும் நிலை இருந்து வருகிறது.சேத்தியாதோப்பில் பல ஆண்டுகளாக ஆரம்ப சுகாதார நிலையமாக இருந்து வருவதை அரசு தனிக்கவனம் செலுத்தி நவீன வசதிகளுடன் கூடிய பொதுமருத்துவமனையாக மேம்படுத்த வேண்டும். இதற்காக மக்கள் பிரதிநிதிகளும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X