பொது செய்தி

தமிழ்நாடு

நெல்லிக்குப்பம் பஸ் நிலையத்தின் உள்ளே பஸ்கள் செல்ல துவங்கின

Added : செப் 15, 2020
Share
Advertisement

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் பஸ் நிலையத்தின் உள்ளே பஸ்கள் சென்று வர துவங்கியுள்ளாதால் பொதுமக்கள் மகிழ்சியடைந்துள்ளனர். நெல்லிக்குப்பம் நகராட்சியில் 2005 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா பஸ் நிலையம் கட்ட ஒரு கோடி நிதி ஒதுக்கினார்.அதற்கான பணி அப்போது முடியவில்லை.பிறகு வந்த தி.மு.க. ஆட்சியில் 2008 ஆம் ஆண்டு துணை முதல்வர் ஸ்டாலின் பஸ் நிலையத்தை திறந்து வைத்தார்.ஒரு சில நாட்கள் மட்டுமே பஸ்கள் உள்ளே சென்றன.அதன்பிறகு பஸ்கள் உள்ளே செல்லாமல் வெளியே நின்று செல்கின்றன.நகராட்சி மற்றும் போலீஸ் அதிகாரிகளும் பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் சென்று வர நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் பஸ் நிலையம் செயல்படாவிட்டாலும் பஸ்களில் கட்டணம் வசூலிப்பதை மட்டும் முறையாக செய்தனர். அங்குள்ள பாலூட்டும் அறையும் மூடியே கிடக்கிறது. அதிகாரிகள் அலட்சியத்தால் ஒரு கோடி செலவில் கட்டப்பட்ட பஸ் நிலையம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.நெல்லிக்குப்பம் நகராட்சி பணிகளை கடந்த 20 நாட்களுக்கு முன் ஆய்வு செய்ய வந்த கலெக்டர் சந்திரசேகர சகாமுரி நகராட்சி அதிகாரிகளும் போலீசாரும் இணைந்து அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்தின் உள்ளே வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டார். இருந்தும் அதிகாரிகள் அலட்சியமாக இருந்துவந்தனர்.இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.அதைதொடர்ந்து கமிஷனர் பிரபாகரன் உத்தரவின்பேரில் நகராட்சி ஊழியர்கள் பஸ் நிலையத்தின் உள்ளே பஸ்கள் செல்ல நடவடிக்கை எடுத்தனர்.இதனால் அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்தின் உள்ளே சென்றன.இந்த பணியை நகராட்சி ஊழியர்கள் கடமைக்கு செய்யாமல் தொடர்ந்து பஸ்கள் உள்ளே செல்வதை கண்காணிப்பது நல்லது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X