பொது செய்தி

தமிழ்நாடு

நெய்வேலியில் கருணாநிதி சிலை திறப்பு தி.மு.க., மாவட்டச் செயலர் அழைப்பு

Added : செப் 15, 2020
Share
Advertisement

விருத்தாசலம்; நெய்வேலியில் நாளை மறுநாள் நடக்கும் கருணாநிதி சிலை திறப்பு விழாவில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடலுார் தி.மு.க., மேற்கு மாவட்ட செயலர் கணேசன் எம்.எல்.ஏ., அறிக்கை: தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, மேற்கு மாவட்டம், நெய்வேலி தொ.மு.ச., ரவுண்டானாவில், கருணாநிதி திருவுருவச் சிலை திறப்பு விழா, நாளை மறுநாள் (17ம் தேதி) நடக்கிறது.விழாவில், காணொலி காட்சி மூலம் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்து, புகழஞ்சலி செலுத்துகிறார்.எனவே, திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி ஆகிய சட்டசபை தொகுதிகளில் உள்ள மாவட்ட கட்சி நிர்வாகிகள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், முன்னாள், இந்நாள் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணி அமைப்பாளர்கள், ஊராட்சி, கிளை, வார்டு கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அனைவரும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து, தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X