பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி கட்டடம் கட்ட பூமி பூஜைபாண்டியன் எம்.எல்.ஏ., பங்கேற்பு

Added : செப் 15, 2020
Share
Advertisement

பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டை அருகே புதிய பள்ளி கட்டடம் கட்ட நடந்த பூமி பூஜையை, பாண்டியன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுாரில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சேதமடைந்ததால், பள்ளி இடிக்கப்பட்டு அதே இடத்தில், ஒருங்கிணைந்த பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் 15 லட்சத்து, 47 ஆயிரம் ரூபாய் மதிப்பில், புதிய பள்ளி கட்டடம் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது.ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். சேர்மன் கருணாநிதி, பி.டி.ஓ.,க்கள் சிவஞானசுந்தரம், அசோக்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை, லதா வரவேற்றார். பூமி பூஜையை, பாண்டியன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.விழாவில், முன்னாள் ஒன்றிய செயலர் இளங்கோவன், ஒன்றிய கவுன்சிலர் ரங்கம்மாள், அப்துல் ஹக், ஷேக் இப்ராஹிம், முகமது ஹவுஸ், மகேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X