சேத்தியாத்தோப்பு சரகத்திற்கு டி.எஸ்.பி., பொறுப்பேற்ப்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சேத்தியாத்தோப்பு சரகத்திற்கு டி.எஸ்.பி., பொறுப்பேற்ப்பு

Added : செப் 15, 2020
Share

சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு சரகத்தில் புதிய டி.எஸ்.பி., யாக சுந்தரம் பொறுப்பேற்றுள்ளார்.சேத்தியாத்தோப்பு சரகத்தில் இருந்த டி.எஸ்.பி., ஜவகர்லால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பணியிடம் மாறுதாலாகி சென்றார்.அதனை தொடர்ந்து மதுவிலக்குப்பிரிவு டி.எஸ்.பி., ஸ்ரீதர் சேத்தியாத்தோப்பு சரகத்தினை கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார்.கடலுார் மாவட்ட குற்றப்பிரிவில் பணியாற்றிய டி.எஸ்.பி., சுந்தரம் இடம் மாறுதலாகி சேத்தியாத்தோப்பு சரக டி.எஸ்.பி., பொறுப்பேற்றார்.புதிய டி.எஸ்.பி., சுந்தரம் பொறுப்பேற்றதை தொடர்ந்து சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி, அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள், சப்இன்ஸ்பெக்டர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X