பொது செய்தி

தமிழ்நாடு

தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை முகாம்

Added : செப் 15, 2020
Share
Advertisement

பெண்ணாடம்; நல்லுார் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் இளைஞர், இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.

பெண்ணாடம் அடுத்த மாளிகைக்கோட்டத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, தெற்கு ஒன்றிய செயலர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் காரைச்செழியன், மாவட்ட பொருளாளர் ராமு, ஒன்றிய ஜெ., பேரவை செயலர் வாசுதேவன், ஒன்றிய பொருளாளர் சேகர் முன்னிலை வகித்தனர். கிளை செயலர் சுந்தரம் வரவேற்றார்.மாவட்ட செயலர் அருண்மொழிதேவன் ஆலோசனை வழங்கி, இளைஞர், இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைத்தார். முன்னாள் அ.தி.மு.க., ஊராட்சி செயலர் அர்ச்சுணன், மாவட்ட கவுன்சிலர் சுப்ரமணியன், மகளிரணி செயலர் செல்வி, வடகரை கூட்டுறவு சங்க தலைவர் ராமலிங்கம், கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். மாளிகைக்கோட்டம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் மணிக்கண்ணன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X