பொது செய்தி

தமிழ்நாடு

சமூக இடைவெளி கடைபிடிக்காதபிரியாணி கடைக்கு அபராதம்

Added : செப் 15, 2020
Share
Advertisement

கடலுார்; கடலுாரில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வியாபாரம் செய்த பிரியாணி கடைக்கு, கலெக்டர் உத்தரவுபடி அபராதம் விதிக்கப்பட்டது.

கடலுார் மாவட்டத்தில் கொரோனாதொற்று பரவல் காரணமாக தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.அதன் அடிப்படையில் நேற்று கடலுார் செம்மண்டலத்தில் கலெக்டர் சந்திரசேக சகாமுரி திடீர் ஆய்வுமேற்கொண்டார். அப்போது, அங்குள்ள பிரியாணி கடையில் சமூக இடைவெளி கடைபிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் வியாபாரம் செய்தவர்களை கண்டித்த கலெக்டர், அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.அதன்படி கடலுார் நகராட்சி பணியாளர்கள் நேரடியாக சென்று முக கவசம் அணியாமல் வியாபாரம் செய்த ஐந்து நபர்களுக்கு தலா ரூ.100, சமுக இடைவெளியை கடைபிடிக்காததற்கு ரூ. 2000 அபராதம் விதித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X