பொது செய்தி

தமிழ்நாடு

நோய் அறிகுறி இருந்தால் பரிசோதனைஅவசியம்: கலெக்டர் வேண்டுகோள்

Added : செப் 15, 2020
Share
Advertisement
 நோய் அறிகுறி இருந்தால் பரிசோதனைஅவசியம்: கலெக்டர் வேண்டுகோள்

கடலுார்; நோய் தொற்று அறிகுறி இருந்தால் பரிசோதனை செய்து கொள்ள பொதுமக்கள் முன் வர வேண்டுமென, கலெக்டர் சந்திரசேகர சகாமுரி கூறினார்.

மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு இறந்தவர்கள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கடலுாரில் நடந்தது. கலெக்டர் சந்திரசேகர சகாமுரி தலைமை தாங்கி பேசியதாவது: மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா பாதிக்கப்பட்டு 167 பேர் இறந்துள்ளனர். தொற்று ஏற்பட்டவர்கள் உடனடியாக சிகிச்சைக்கு வர வேண்டும். நோய் அறிகுறிகள் இருந்தால் பரிசோதனைக்கு பொதுமக்கள் முன்வர வேண்டும்.

சர்க்கரை நோய், இருதய நோய் போன்வற்றிற்கு தொடர்ச்சியாக மருந்து உட்கொண்டு வருபவர்கள் கவனமாக இருந்து, அவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர்கள் மூலமாகவோ அல்லது சுகாதார பணியாளர்கள் மூலமாகவோ அவர்களுக்கு அறிவுரை வழங்கி கண்காணிக்க வேண்டும்.தனியார் மருத்துவமனைகள், கொரோனா நோயாளிகளை தொற்று தீவிரமடைந்த நிலையில் மேல் சிகிச்சைக்கு உயர் மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்து அனுப்புவதை தவிர்க்க வேண்டும். மாவட்டத்தில் கொரோனா இறப்புகளை தடுக்க 44 ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்படுகிறது. மருத்துவ குழுவினர் அனைத்து பகுதிகளிலும் தீவிரமாக கண்காணித்து அதிக பரிசோதனைகள் செய்து இறப்பு விகிதத்தை குறைக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் கீதா, நலப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ் பாபு, சுகாதாரத் துறை உதவி திட்ட மேலாளர் கவுதம், அரசு தலைமைமருத்துவமனை கண்காணிப்பாளர் சாய் லீலா, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனை கண்காணிப்பாளர் சண்முகம் ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X