பொது செய்தி

தமிழ்நாடு

பூதங்குடி ஊராட்சியில் குடிநீர் பிரச்னை: பி.டி.ஓ., நேரில் ஆய்வு

Added : செப் 15, 2020
Share
Advertisement

சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடி ஊராட்சி அள்ளூர் பாழ்வாய்க்காலில் குடிதண்ணீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளை கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் விமலா ஆய்வு செய்தார்.

கீரப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள பூதங்குடி ஊராட்சி அள்ளூர் பாழ்வாய்க்கால் சிதம்பரம் சாலையில் உள்ள குடியிருப்புகளுக்கு குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது குறித்து பொதுமக்கள் புகார் அளித்தனர்.அதனை தொடர்ந்து ஆய்விற்கு வந்த கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் விமலா பாழ்வாய்க்கால் சிதம்பரம் சாலையில் குடிதண்ணீர் பற்றாக்குறை உள்ள குடியிருப்பு பகுதிகளை ஆய்வு செய்தார்.பின் பாழ்வாய்க்காலில் சிதம்பரம் சாலையில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு புதிய குடிநீர் குழாய் அமைத்து குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பி.டி.ஓ., விமலா கூறினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பச்சையப்பன், ஊராட்சி தலைவி ஜெயாசெல்வராசு, துணைத்தலைவர் கோமேதகம் ராமகிருஷ்ணன், ஊராட்சி செயலர் ஸ்ரீலா மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஆய்வின்போது உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X