பொது செய்தி

தமிழ்நாடு

டிரான்ஸ்பார்மர் இயக்கி வைப்பு

Added : செப் 15, 2020
Share
Advertisement

வேப்பூர்; வேப்பூர் அருகே புதிய டிரான்ஸ்பார்மர்களை உதவி செயற்பொறியாளர் இயக்கி வைத்தார்.வேப்பூர் அடுத்த நகர் ஊராட்சியில் மக்களின் குடிநீர் வசதிக்காக, கோமுகி ஆற்றில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டது. ஆனால், அப்பகுதியில் மின்சார வசதி இல்லாததால், குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை. இது குறித்து நகர் ஊராட்சி தலைவர் சங்கர் மின் துறைக்கு கோரிக்கை மனு வழங்கியதை தொடர்ந்து, கோமுகி ஆற்றில் இரண்டு புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டன.இதனை நல்லூர் மின்துறை உதவி செயற்பொறியாளர் வேல்முருகன் இயக்கி வைத்தார். நகர் ஊராட்சி தலைவர் சங்கர், நல்லூர் ஊராட்சி தலைவர் புஷ்பா குமரேசன், துணைத் தலைவர் ராமசாமி, ஊராட்சி செயலர் தங்கவேல், வார்டு உறுப்பினர் பாக்கியராஜ், வழக்கறிஞர் தமிழ்மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X