பொது செய்தி

தமிழ்நாடு

மின் அலுவலகங்களை மாற்ற கோரிக்கை

Added : செப் 15, 2020
Share
Advertisement

குறிஞ்சிப்பாடி; குறிஞ்சிப்பாடி கோட்ட மின் அலுவலகங்களை இடமாற்றம் செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிஞ்சிப்பாடி மின் கோட்ட இயக்குதல் மற்றும் பராமரித்தல் செயற்பொறியாளர் அலுவலகம், குறிஞ்சிப்பாடி--வடலூர் சாலையில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தின் கீழ், பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. நிர்வாக வசதிக்காகவும், மின் இணைப்புகள் அதிகரிப்பாலும், குறிஞ்சிப்பாடி நகரம், கிராமம், கிராமம் வடக்கு என கோட்டம் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டது.ஆனால், இந்த பிரிவுகளுக்கான அலுவலகங்கள், தனித்தனி அலுவலகங்களாக அந்தந்த பகுதிகளில் இயங்காமல், குறிஞ்சிப்பாடி செயற்பொறியாளர் அலுவலக வளாகத்திலேயே இயங்கி வருகின்றது. இதனால் பொதுமக்கள் தங்கள் மின் கட்டணம் செலுத்துவது, மின் இணைப்பு பெறுவது உள்ளிட்ட மின்சார பயன்பாடு தொடர்பான பணிகள் மற்றும் கோரிக்கைகளுக்கு, குறிஞ்சிப்பாடி செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு வந்து செல்லும் நிலையே இருந்து வருகிறது.மேலும், மின் வினியோகம் தொடர்பான பிரச்னைகளை சரி செய்ய, மின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், தங்களது பிரிவு பகுதிகளுக்கு செல்வதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் மின்தடை ஏற்படும் காலங்களில் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, குறிஞ்சிப்பாடி கிராமம் பிரிவு கிராமங்களின் மைய பகுதியான தம்பிப்பேட்டைக்கும், கிராமம் வடக்கு பிரிவு அதன் மையமான ஆடூர் அகரம் பகுதிக்கும் மாற்றம் செய்ய வேண்டும் என, பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X