வழக்கை ரத்து செய்யக் கோரி வி.ஏ.ஓ.,விடம் மக்கள் மனு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வழக்கை ரத்து செய்யக் கோரி வி.ஏ.ஓ.,விடம் மக்கள் மனு

Added : செப் 15, 2020
Share

விருத்தாசலம்; போலீஸ் வழக்கை ரத்து செய்யக்கோரி, ஆலிச்சிகுடி கிராம மக்கள் வி.ஏ.ஓ.,விடம் மனு கொடுத்தனர்.

விருத்தாசலம் அடுத்த ஆலிச்சிகுடி கிராம மக்கள், மக்கள் அதிகாரம் அமைப்பின் கிளை ஒருங்கிணைப்பாளர் அருள்முருகன் தலைமையில் நேற்று காலை வி.ஏ.ஓ., அலுவலகத்தில் திரண்டனர். அப்போது, ஆலிச்சிகுடி கிராம ஏரிப்பாசன வாய்க்காலை துார்வாரக்கோரி, கடந்த மார்ச் மாதம் தாசில்தாருக்கு பதிவுதபால் அனுப்பினோம்.பின்னர், ஜூலை மாதம், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர், பி.டி.ஓ., ஊராட்சி மன்றம் ஆகியோருக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லை. இதைக்கண்டித்து, ஆலிச்சிகுடி அவலம் என போஸ்டர் ஒட்டிய மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த இருவர் மீது கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே, வழக்கை ரத்து செய்யக்கோரி, வரும் 21ம் தேதி தாலுகா அலுவலகம் முன் தர்ணா போராட்டம் நடத்த உள்ளோம் எனக் கூறி, வி.ஏ.ஓ., அலுவலகத்தில் மனு கொடுத்துவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். வட்டார ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X