பொது செய்தி

தமிழ்நாடு

பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா

Added : செப் 15, 2020
Share
Advertisement

கடலுார்; கடலுார், செம்மண்டலத்தில் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லுாரி அருகில் பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா கிளை திறப்பு விழா நடந்தது.

கலெக்டர் சந்திரசேகர சகாமுரி புதிய கிளையை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பேசுகையில், 'விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர், இளைஞர்களுக்கு கடனுதவி வழங்குவது மட்டுமின்றி அவர்களுக்கு தொழில் முன்னேற்றத்திற்கான வழிமுறைகள், அறிவுரைகளை வழங்குவதில் வங்கிகள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் ' என்றார். வங்கி மண்டல மேலாளர் ராஜேஷ்குமார் வரவேற்று பேசுகையில், 'பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா கடந்த 1936ம் ஆண்டு துவங்கப்பட்டது. இதுவரை 1,900 கிளைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்தாண்டு தமிழகத்தில் கூடுதலாக 15 கிளைகளை ஒவ்வொரு மாவட்டத்தில் திறக்க உள்ளோம்' என்றார். கடந்த மாதம் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தராமன் முன்னிலையில் நடந்த விருது வழங்கும் விழாவில், இவ்வங்கி 'டாப் இம்ப்ரூவர்' விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கிளை மேலாளர் ஜானகி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X