சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பேராசிரியர்கள் பணி நீக்கத்தைகண்டித்து கடலுாரில் ஆர்ப்பாட்டம்

Added : செப் 15, 2020
Share
Advertisement

கடலுார்; பேராசிரியர்கள் பணி நீக்கத்தை கண்டித்து, கடலுார் கந்தசாமி மகளிர் கல்லுாரி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் இயங்கிவரும் 6 கல்லுாரிகளை சேர்ந்த 152 பேராசிரியர்கள், அறக்கட்டளை சார்பில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முறையான கல்வித் தகுதி, பணி அனுபவம், பல்லைக்கழக கல்வித்தகுதி சான்றிதழ் மற்றும் கல்லுாரி கல்வி இணை இயக்குனர் பணி நியமன ஒப்புதல் பெற்று பணியாற்றி வரும் பேராசிரியர்களின் பணி நீக்க உத்தரவை திரும்பப் பெறக்கோரி, அந்தந்த கல்லுாரிகள் முன்பு பல்கலைகழக ஆசிரியர் சங்கம் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கடலுார் கந்தசாமி கல்லுாரி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க கிளைத்தலைவர் வசந்தி தலைமை தாங்கினார். செயலாளர் லாவண்யா முன்னிலை வகித்தார். சங்க உறுப்பினர்கள் பேராசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.பொருளாளர் அன்பரசி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X