விருத்தாசலம்; விருத்தாசலம் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 50 ஆயிரம் சாமந்தி பூ கன்றுகள் உற்பத்தி செய்து, விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன.
விருத்தாசலம் அரசு தோட்டக்கலைப் பண்ணையில், வி.ஆர்.ஐ., 3 வீரிய ரக முந்திரி, லக்னோ- 49 ரக கொய்யா, பாலுார் -1, பாலுார்- 2 ரக பலா, ரெட் லேடி ரக பப்பாளி, உயர் ரக மா, சப்போட்டா உள்ளிட்ட பழ வகைகள், கத்திரி, மிளகாய், சாமந்தி உள்ளிட்ட பூ வகை செடிகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை, தேசிய தோட்டக்கலை இயக்கம் மற்றும் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் ஆகியவற்றின் மூலம் மானிய விலையிலும், நேரடி விலையிலும் விவசாயிகள், பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.அதன்படி, 2020 - 21 நடப்பாண்டில், 1 லட்சம் மிளகாய் மற்றும் 2 லட்சம் கத்திரி கன்றுகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக துவங்கியுள்ளது. இதற்காக பண்ணை வளாகத்தில் உள்ள பசுமை குடிலில் குழித்தட்டு முறையில் கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இவை, நன்கு வளர்ச்சியடைந்ததும், விற்பனை செய்யப்பட உள்ளன. அதில், மிளகாய், கத்திரி கன்றுகள் நேரடி விலையில் 1 ரூபாய்க்கும், தேசிய தோட்டக்கலை இயக்கம் மூலம் ெஹக்டருக்கு 20 ஆயிரம் கன்றுகள் வீதம் விவசாயிகளுக்கு மானியமாகவும் வழங்கப்பட உள்ளன.மேலும், ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்கூட்டியே 50 ஆயிரம் சாமந்தி பூ கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டன. இவை நன்கு வளர்ச்சியடைந்து, தற்போது விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன. இதன் மூலம் ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகைக்கு சாமந்தி பூக்களை அறுவடை செய்து விவசாயிகள் பயன்பெற முடியும்.
ஒரு கன்று நேரடி விலையில் 4 ரூபாய்க்கும், ெஹக்டருக்கு 4,000 கன்றுகள் வீதம் மானியமாகவும் வழங்கப்பட உள்ளன.இது குறித்து பண்ணை மேலாளர் பிரகாஷ் கூறுகையில், 'நடப்பாண்டிற்கு 1 லட்சம் மிளகாய், 2 லட்சம் கத்திரி கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை நேரடியாக 1 ரூபாய்க்கும், தேசிய தோட்டக்கலை இயக்கம் மூலம் ெஹக்டருக்கு 20 ஆயிரம் கன்றுகளும் வழங்கப்படும். அதுபோல், வர உள்ள ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை முன்னிட்டு சாமந்தி பூ கன்றுகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன.
நேரடியாக 4 ரூபாய்க்கும், மானியமாக ெஹக்டருக்கு 4,000 கன்றுகளும் வழங்கப்படும்.மேலும், லக்னோ 49 ரக கொய்யா கன்றுகள் அடர் நடவு முறையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை, அடுத்த வாரத்தில் விற்பனைக்கு வந்து விடும். ஒரு செடி 30 ரூபாய்க்கும், மானிய விலையில் ெஹக்டருக்கு 586 கன்றுகளும் வழங்கப்படும். மானிய விலையில் பெற விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்டக்கலை அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE