பொது செய்தி

தமிழ்நாடு

காய்கறி பயிரிடுவோருக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு

Added : செப் 15, 2020
Share
Advertisement

கடலுார்; காய்கறி பயிரிடும் விவசாயிகள் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அண்ணாகிராமம் தோட்டக்கலை உதவி இயக்குனர் நாகநந்தினி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கத்தரி, வெண்டை, புடலை, பீர்க்கன், பூசணி, பரங்கி சுரை காய்கறி பயிரிடம் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை ஹெக்டருக்கு ரூ. 2500 வழங்கப்படும். இப்பயிர் ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள், விதை அல்லது நடவு செடிகள் சாகுபடி செய்வதற்காக கொள்முதல் செய்த விலைப்பட்டில் மற்றும் கிராம அலுவலரின் சிட்டா அடங்கல், குடும்ப அட்டை நகல், ஆதார் கார்டு நகல், வங்கி கணக்கு புத்தகம் நகல், பாஸ்போட் சைஸ் புகைப்படம் 2 ஆகிய விவரங்களுடன் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.

ஒரு விவசாயிக்கு சாகுபடி செய்யப்பட்ட பரப்பின் அடிப்படையில் அதிகபட்சமாக 2 ஹெக்டர் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த வாய்ப்பை அண்ணாகிராம வட்டார விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.மேலும் விவரங்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X