பொது செய்தி

தமிழ்நாடு

குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணி கலெக்டர் சந்திரசேகர சகாமுரி துவக்கி வைப்பு

Added : செப் 15, 2020
Share
Advertisement

கடலுார்; தேசிய குடற்புழு நீக்க வாரத்தையொட்டி, பள்ளி மாணவியருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை, கலெக்டர் சந்திரசேகர சகாமுரி வழங்கினார்.

நாடு முழுவதும் 1 முதல் 19 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்) நேற்று (14ம் தேதி) முதல் 28 வரையில் மூன்று சுற்றுகளாக வழங்கப்படுகிறது.இதில் முதல் சுற்று 14ம் நேற்று முதல் 19ம் தேதி வரையிலும், 2ம் சுற்று 21ம் தேதி முதல் 26 வரையிலும், மூன்றாம் சுற்றாக விடுபட்ட குழந்தைகளுக்கு சிறப்பு முகாம் 28ம் தேதி துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களின் மூலமாக இலவசமாக வழங்கப்படுகிறது.கடலுார் திருப்பாதிரிபுலியூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், தேசிய குடற்புழு நீக்க வாரத்தை முன்னிட்டு, கலெக்டர் சந்திரசேகர சகாமுரி, பள்ளி மாணவியருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி துவக்கி வைத்தார்.அப்போது அவர் கூறுகையில், இந்த மாத்திரை குழந்தையின் ஆரோக்கியம் மேம்படுவதுடன் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், கல்வித்திறன் அதிகரிக்கவும் உதவுகிறது.நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் ரத்த சோகையினால் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். முக்கியமாக, கிராமப்புறங்களில் அதிக அளவிலான குழந்தைகள் பாதித்துள்ளனர். எடை குறைவாக உள்ளனர்.எனவே, கடலுார் மாவட்டத்தில் 6 லட்சம் குழந்தைகளுக்கு 2023 அங்கன்வாடி மையங்களிலும், 319 துணை சுகாதார நிலையங்களிலும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளது. இதில் 1 முதல் 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 200 எம்.ஜி கொண்ட அல்பெண்டசோல் மாத்திரையும், 2 முதல் 19 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 400 எம்.ஜி கொண்ட மாத்திரையும் வழங்கப்படும். இந்த மாத்திரைகளை வழங்குவதற்கு 3,655 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என, தெரிவித்தார்.நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை துணை இயக்குநர் கீதா, மாவட்ட தாய் சேய் நல அலுவலர் சசிகலா, திருப்பாதிரிபுலியூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கிறிஸ்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X