பொது செய்தி

தமிழ்நாடு

கடலுாரில் 296 பேருக்கு தொற்றுமூவர் பலி: 435 பேர் 'டிஸ்சார்ஜ்'

Added : செப் 15, 2020
Share
Advertisement

கடலுார்; கடலுார் மாவட்டத்தில், மேலும், 296 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 16,558 ஆக அதிகரித்துள்ளது.

கடலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை, கொரோனா பாதிப்பு 16,262 ஆகும். கர்ப்பிணி பெண்கள் 3 பேர்,, பிரசவித்தபெண் ஒருவர், அறுவை சிகிச்சைக்கு முன் அனுமதிக்கப்பட்டோர் இருவர், நோய் அறிகுறியுடன் 134 பேர் தனிமைப்படுத்தப்பட்டோர் 5 பேர், நோய் தடுப்பு களப் பணியாளர் ஒருவர் . பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்த 150 பேர், என மொத்தம் 296 பேருக்குநேற்று, தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 16,558 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று, 435 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 13,135 ஆக அதிகரித்துள்ளது.மாவட்டத்தில் இதுவரை 1,45,330 பேருக்கு பரிசோதனை செய்ததில் 16,558 பேருக்கு தொற்று உறுதியானது. 1,26,305பேருக்கு தொற்று இல்லை. 2,467 பேருக்கு முடிவுகள் வரவேண்டியுள்ளது.மூவர் பலிகடலுார் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் வரை, 167 பேர் இறந்தனர். மங்களூரைச்சேர்ந்த 71 வயது முதியவர், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையிலும், குறிஞ்சிப்பாடியில் 67 வயதுமூதாட்டி, கடலுார் 67 வயது முதியவர் ஆகியோர் கடலுார் அரசு மருத்துவமனையிலும் நேற்று இறந்தனர்.இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை 170 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X