பூட்டிய வீட்டை உடைத்து திருட்டு | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பூட்டிய வீட்டை உடைத்து திருட்டு

Added : செப் 15, 2020
Share

சிதம்பரம்; சிதம்பரம் அருகே பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிதம்பரம் அடுத்த கண்ணங்குடி சொக்கலிங்கபுரம் நகரில் வசிப்பவர் ராஜேஷ், 39, இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் முன் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 சவரன் தங்க நகை மற்றும் 300 கிராம் வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து ராஜேஷ் கொடுத்த புகாரின் பேரில் தாலுக்கா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மதிப்பு 1.50 லட்சம் ரூபாயாகும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X