சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர் வீட்டில் 5 பவுன் நகை திருட்டு

Added : செப் 15, 2020
Share
Advertisement

விருத்தாசலம்; விருத்தாசலம் அருகே ஆசிரியர் வீட்டில் ஐந்தரை பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.விருத்தாசலம் அடுத்த கோணாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான் அந்துவான், ஆசிரியர். இவர் தனது குடும்பத்தினருடன், கடந்த இரண்டு நாட்களுக்கு முன், மங்கலம்பேட்டையில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று மாலை 6:00 மணியளவில் வீட்டிற்கு வந்தபோது, கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த ஐந்தரை சவரன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து, மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X