சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பிரதமர் நிதியுதவி முறைகேடு: கடலுாரில் மூன்று பேர் கைது

Added : செப் 15, 2020
Share
Advertisement

கடலுார்; கடலுார் மாவட்டத்தில் பி.எம்., கிசான் திட்டத்தில் நிதியுதவி பெற்றதில் முறைகேட்டில் ஈடுபட்ட கணினி மைய உரிமையாளர் உட்பட மூவரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டத்தில் 'பிரதம மந்திரி கிசான்' திட்டத்தில் சேர்ந்த 80,737 விவசாயிகளின் உண்மைத் தன்மை ஆய்வு செய்யப்பட்டது. இவர்களில், 70,709 பேர் போலி என்பதும், 27,634 பேர் வெளி மாவட்டத்தினர் என்பதும், 43,075 பேர் கடலுார் மாவட்டத்தினர் என்பதும் தெரிந்தது.இதில், கடலுார் மாவட்டத்தில் 3,483 பேர் போலி பயனாளிகள் எனவும் தெரிந்தது. 14.26 கோடி ரூபாய்க்கு மோசடி நடந்துள்ள நிலையில், போலி பயனாளிகள் கணக்கில் இருந்து 5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முறைகேடு குறித்து கடலுார் சி.பி.சி.ஐ.டி., போலீசார், 13 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த திருத்துறையூரைச் சேர்ந்த கணினி மைய உரிமையாளர் தனுசு, 33; விவசாயிகள் அக்கடவல்லி அழகேசன், 53; பண்டரக்கோட்டை குமரகுரு, 48; ஆகியோரை நேற்று பிடித்து விசாரணை நடத்தினர்.இதில், அழகேசன், குமரகுரு இருவரும் விவசாயிகள் அல்லாதவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்று வந்ததும், அதனை புதுப்பேட்டையில் தனுசு நடத்தி வரும் கணினி மையத்தில் கணினியில் பதிவேற்றம் செய்து விண்ணப்பித்து மோசடியில் ஈடுபட்டதும் தெரிந்தது. உடன், மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X