அரகண்டநல்லுார் தரைப்பாலம் அருகே விபத்து அபாயம்

Added : செப் 15, 2020
Share
Advertisement
 அரகண்டநல்லுார் தரைப்பாலம் அருகே விபத்து அபாயம்

திருக்கோவிலுார்; அரகண்டநல்லுார் தரைப்பாலம் பகுதியில் போக்குவரத்து அதிகரித்திருப்பதால் விபத்தைத் தவிர்க்க போக்குவரத்தை சீரமைக்க அப்பகுதியில் போலீசார் பணியில் ஈடுபட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருக்கோவிலுாரையும் - மணம்பூண்டியையும் இணைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் உள்ளது. தற்போது பாலம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக திருக்கோவிலுார், கீழையூரிலிருந்து அரகண்டநல்லுாரை இணைக்கும் வகையில் பழமையான தரைப்பாலம் சீரமைக்கப்பட்டு மாற்றுப் பாதையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.இதன் காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை மார்க்கத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் அரகண்டநல்லுார் தரைப் பாலத்தின் வழியாகத்தான் திருக்கோவிலுாருக்கு வரவேண்டும். அதேபோல் திருக்கோவிலுாரில் இருந்து செல்லும் வாகனங்களும் தரைப் பாலத்தைத்தான் பயன்படுத்துகின்றனர்.எனவே, அரகண்டநல்லுார் தரைப்பாலம் பகுதியில் போக்குவரத்து சிக்கல் ஏற்பட்டு, விபத்துகள் நிகழ்ந்து, உயிரிழப்பு ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.போக்குவரத்து போலீசார் இப்பகுதியில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவதன் மூலம் விபத்துகளைத் தவிர்க்க முடியும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X