கருணாபுரத்தில் அகற்றப்படாதகுப்பைகளால் மக்கள் பாதிப்பு

Added : செப் 15, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி கருணாபுரம் சாலையோரத்தில் கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றப்படாததால் அப்பகுதியில் சுகாதாரசீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் சாலையோரத்தில் கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றப்படாமல் பல நாட்களாக குவிந்துள்ளன. இது அப்பகுதியில் வசித்து வரும் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சிறுவர்களுக்கு ஒவ்வாமை நோயை ஏற்படுத்தி வருகிறது. மேலும் காற்றில் குப்பைகள் பரவி அப்பகுதி முழுவதும் படர்ந்து கிடப்பதால், சுத்தமில்லா பகுதியாக கருணாபுரம் விளங்கி வருகிறது.எனவே கருணாபுரம் பகுதியில் அகற்றப்படாமல் விடப்பட்டிருக்கும் குப்பைகளை நகராட்சி மற்றும் துாய்மை நகரம் கள்ளக்குறிச்சி இயக்கத்தினரும் உடனடியாக அங்கிருந்து அகற்றிடநடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X