பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி செயலாளரை மாற்றாதீர்கள்பொதுமக்கள் பி.டி.ஓ., விடம் மனு

Added : செப் 15, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி; ஊராட்சி செயலாளரை இடமாற்றம் செய்ய வேண்டாம் என கள்ளக்குறிச்சி அடுத்த மாடூர் கிராம மக்கள் பி.டி.ஓ.,விடம் மனு அளித்தனர்.மனு விபரம்:கள்ளக்குறிச்சி அடுத்த மாடூர் கிராமத்தில் ஊராட்சி செயலாளராக பணிபுரியும் தாகப்பிள்ளை சிறப்பாக பணிபுரிந்து வருகிறார். இவரை இடமாற்றம் செய்வதாகவும், அவருக்கு பதிலாக வீரசோழபுரம் ஊராட்சி செயலாளரை மாடூருக்கு பணிமாற்றம் செய்யப்போவதாகவும் எங்களுக்கு தகவல் கிடைத்தது.தாகப்பிள்ளை மீது புகார் ஏதும் இல்லாத பட்சத்தில், அவரை இடமாற்றம் செய்யக்கூடாது. அவரை மீண்டும் மாடூரில் பணி அமர்த்தவில்லையெனில் சாலை மறியல், கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X