பொது செய்தி

தமிழ்நாடு

குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல்

Added : செப் 15, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி; குடற்புழு நீக்க வாரத்தையொட்டி, கள்ளக்குறிச்சி பொது சுகாதாரம் மற்றம் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் மாவட்டத்தில் அல்பெண்டசோல் எனும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் துவங்கியது.

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் கிரண் குராலா பள்ளி மாணவர்களுக்கு மாத்திரை வழங்கி முகாமை துவக்கி வைத்தார். மாவட்ட சுகாதாரப்பணிகள் துறை துணை இயக்குனர் சதீஷ்குமார், வட்டார மருத்துவ அலுவலர் பங்கஜம், டாக்டர்கள் ஜெகதீஸ்வரன், மணிரத்னம், சண்முகசுந்தரம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகாலிங்கம், மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் சுந்தர்பாபு, பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன், உடற்கல்வி ஆசிரியர் வாசு உட்பட பலர் பங்கேற்றனர்.மாவட்டத்தில் உள்ள 4 லட்சத்து 36 ஆயிரத்து 800 குழந்தைகளுக்கும், முதல் சுற்று வரும் 19ம் தேதிவரையிலும், இரண்டாம் சுற்று 21ம் தேதி முதல் 26ம் தேதி வரையிலும் (திங்கள், வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில்) மற்றும் மூன்றாம் சுற்றாக விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் 28ம் தேதி அனைத்து துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் இலவசமாக வழங்கப்படுகிறது.இதன் மூலம் குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படுவதுடன் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், கல்வித்திறன் அதிகரிக்கவும் உதவுகிறது என துணை இயக்குனர் சதீஷ்குமார் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X