பொது செய்தி

தமிழ்நாடு

மேல்பாதியில் காட்சிப் பொருளான மண்புழு உரம் தயாரிப்பு மையம்

Added : செப் 15, 2020
Share
Advertisement

கண்டமங்கலம்; கண்டமங்கலம் அடுத்த சொர்ணாவூர், மேல்பாதி ஊராட்சியில் மண்புழு உரம் தயாரிப்பு மைய கட்டுமானப் பணி பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டதால் காட்சிப்பொருளாக உள்ளது.கண்டமங்கலம் அடுத்த சொர்ணாவூர், மேல்பாதி ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் ஒரு லட்சம் ரூபாய் செலவில் மண்புழு உரம் தயாரிப்பு மைய கட்டுமானப் பணி கடந்த 18 மாதங்களுக்கு முன்பு துவங்கியது.இதற்கான பெரிய விளம்பர சுவரும் அமைக்கப்பட்டது. சில நாட்களில் 3 அடி உயரத்திற்கு 8 சிமென்ட் தொட்டிகள் கட்டப்பட்டது. அதன்பின்னர் கட்டுமான பணி கிடப்பில் போடப்பட்டது. 18 மாதங்கள் கடந்தும் மண்புழு உரம் தயாரிப்பு மையம் கட்டி முடிக்கப்படாமல் புதர்மண்டி காட்சிப் பொருளாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X